பக்ரீத் பண்டிகை - திருச்சியில் ரூ 1 கோடி அளவில் ஆடுகள் வர்த்தகம்

பக்ரீத் பண்டிகை - திருச்சியில் ரூ 1 கோடி அளவில் ஆடுகள் வர்த்தகம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இச்சந்தை வாரந்தோறும் செவ்வாய் கிழமை மாலை துவங்கி புதன் கிழமை பிற்பகல் வரை நடைபெறும். அதேபோல் ஆட்டுச்சந்தையும் வாரந்தோறும் புதன்கிழமை காலை 5 மணிக்குத் துவங்கி 10 மணிவரை நடைபெறுவது வழக்கம்.

விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த விவசாயம் இருந்த நிலையில், தற்போது கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ஆடுவளர்ப்பு மூலம் கிடைக்கும் வருமானம் விவசாயிகளுக்கு வருமானத்தை ஏற்படுத்தித்தரக் கூடியதாக உள்ளது. இதனால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பும் அவர்களின் பொருளாதாரத்திற்கு பெரும் உதவிபுரிந்து வருகிறது.

இந்நலையில் வருகின்ற 17-ந்தேதி திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகை  கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகள் அதிகளவில் விற்பணையாகும் என்பதால் தங்களது ஆடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என எண்ணி ஆடு வளர்ப்பவர்கள் ஆடுகளை விற்பணை செய்வதற்காக அதிகளவில் மணப்பாறை சந்தைக்கு கொண்டுவந்திருந்தனர்.

இன்று காலை நடைபெற்ற சந்தைக்கு சுமார் 4000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பணைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. ஆடுகளில் வரத்து அதிகமாக இருந்ததால் அதன் விலை கணிசமாக குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் பக்ரீத் பண்டிகைக்காக இஸ்லாமியர்கள் அதிகளவில் ஆடுகள் வாங்குவதற்காக சந்தைக்கு வந்திருந்தனர். இதேபோல் சந்தைக்கு ஆடுகள் வாங்குவதற்காக திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெருமளவில் வியாபாரிளும், வந்திருந்தனர்.

ஆடுளின் விலை சற்று குறைந்திருந்தாலும் தங்களுக்கு கட்டுபடியாகும் விலையிலேயே விற்பணை நடைபெறுவதாக ஆடுவளர்ப்பவர்கள் தெரிவித்தனர். மணப்பாறை ஆட்டுச்சந்தையில் இன்று ஒரு நாள் மட்டும் ரூ ஒரு கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision