48 மணிநேரத்தில் 410 சேதமடைந்த பள்ளிகளை இடிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 என்ற புதிய திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இணையும் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு.... நெல்லையில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து சேதமடைந்த கட்டிடங்களை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் 205 துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, 85 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை அகற்ற இரு தினங்களில் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று சேதமடைந்துள்ள தனியார் பள்ளி கட்டிடங்களை அகற்றவும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பொதுப்பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்திருந்தால் அவற்றை 24 மணி நேரத்தில் அகற்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வகுப்பறை, உணவுக்கூடம், கழிப்பறைகள் என சேதமடைந்த கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும் அகற்றப்படும். சேதமடைந்த வகுப்பறைகளில் கண்டிப்பாக வகுப்பெடுக்க கூடாது. சேதமடைந்த வகுப்புகளை மூட வேண்டும்.
ஏற்கனவே பொதுப்பணித்துறையிடம் கொடுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் 85 கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்துள்ளதால் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளோ். மழைக்காலத்தில் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டிடங்களை ஆய்வு செய்யப்படும். அவ்வாறு ஆய்வின் போது சேதமடைந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு காத்திராமல் உடனடியாக கட்டிடங்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த 16 கட்டிடங்கள். இதில் எவ்வித சேதமும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இதில் ராணி மங்கம்மாள் கோட்டை உள்ளிட்ட 8. இடங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பள்ளிகளில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்ட பிறகும், பயன்பாட்டில் உள்ள பழைய கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். மேலும் திருச்சி தாரநல்லூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் தரம் குறித்து புகார் எழுந்த நிலையில் அதுகுறித்த NIT வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர் அவர்களின் ஆய்வறிக்கைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn