திருச்சி தொகுதியில் பிரபலமான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
வீர விளையாட்டு மீட்புக்குழு தலைவர் மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் ஆகிய அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார் ராஜேஷ். இவர் ஜல்லிக்கட்டு போராட்டம், ஜல்லிக்கட்டுக்கு தடை கட்டுப்பாடுகள் விதிக்கும் பொழுது போராட்டம் மற்றும் நீதிமன்றங்களை நாடி தீர்வு கண்டார்.
இதனால் ஜல்லிக்கட்டு ராஜேஷ் என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், ஜல்லிக்கட்டுக்கான கோரிக்கைகள் மற்றும் சலுகை கோரி எந்த ஆளும் கட்சி தலைவராக இருந்தாலும் நேரில் சந்தித்து மனு அளிப்பவர். குறிப்பாக திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அதிமுக, தேமுதிக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்கள் நிர்வாகிகளை எளிதில் சந்திக்க கூடியவர்.
இந்த நிலையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜல்லிக்கட்டு ராஜேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நாள்தோறும் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இளைஞர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக போராட்ட களத்தில் ஈடுபட்டிருந்த ஜல்லிக்கட்டு ராஜேஷ் தற்போது அரசியல் களத்தில் இறங்கி போட்டியிடுகிறார்.
சுய விவரம் :
பெயர் : ஜல்லிக்கட்டு ராஜேஷ்.
வயது : 44
படிப்பு : BBA
தந்தை: துரைராஜ்
தாயார் : து.கனகா
மனைவி : ரா.சசிகலா
குழந்தைகள் : 2
தொழில் : விவசாயம்
மாநில தலைவர் : வீர விளையாட்டு மீட்பு கழகம்
ஊர் : உறையூர், திருச்சி.
ஜல்லிக்கட்டு ஆர்வலர். ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், ஸ்டெர்லைட் & நீட் எதிர்ப்பு போராட்டம், காவிரி நீர் விவகாரம் மற்றும் புயல் பாதிப்புகளில் மக்கள் சேவை என தொடர்ந்து மக்கள் பணிகளில் திருச்சி முகமாக முன்னிற்பவர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision