எஸ்.பி மாற்றம் ? ஏமாற்றம் தரும் ராமஜெயம் கொலை வழக்கு !!

எஸ்.பி மாற்றம்  ? ஏமாற்றம் தரும் ராமஜெயம் கொலை வழக்கு !!


அமைச்சர் நேருவின் சகோதரா ராமஜெயம் 2012ம் ஆண்டு மார்ச 29ம் தேதி, அதிகாலை, நடைபயிற்சி சென்ற போது மாயமானார் அதன்பின்னர் அவரின் உடல் திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் சாலையோரத்தில் பொன்னுரங்கபுரம் அருகே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது இந்த கொலை குறித்து சிபிசிஐடி போவீரார் விசாரிதத நிலையில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக் கோரி ராமஜெயம் மனைவி லதா, மதுரை ஐகோர்ட கிளையில் மனு தாக்கல் செய்தார்.


இந்த மனுவை ஐகோர்ட் கிளை விசாரித்து ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி, விசாரணை அறிக்கையை 3 மாதததில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது சிபிஐ விசாரணை நடத்தியும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனையடுத்து, ராமஜெயம் சகோதரர் ரவிச்சந்திரன், ஐகோட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

அதில் சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் மாநில போலீசாரே விசாரிக்க வேண்டும் என்று டிஜிபிக்கு மனு கொடுத்துள்ளேன் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி யிருந்தார் கொலை வழக்கை உள்ளூர் காவல்துறை, சிபிசிஐடி, சிபிஐ  என 10 ஆண்டுகளாக விசாரித்தும் கொலைக்கான நோக்கம் கூட கண்டுபிடிக்கப்படாமல் போனதால் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு ஐகோர்ட் மாற்றியது.

இந்த குழுவிற்கு எஸ்பியாக  ஜெயக்குமார். அரியலூர் டிஎஃபி யாக இருந்த மதன் சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய இந்த சிறப்பு புலனாய்வுக் குழு வழக்கு விசாரணையை மேற்கொள்ளும் என்றும் கோர்ட் தெரிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து பல்வேறு வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்த 5 இன்ஸ்பெக்டர்கள். 12 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 40 பர் கொண்ட தனிப்படை உருவாக்கப்பட்டு சிறப்பு புலனாய்வு உருவாக்கப்பட்டது. எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் இந்த குழு விசாரணை மேற்கொண்டு வந்தது.

டெல்டா மாவட்ட ரவுடிகள் மட்டுமன்றி தமிழகத்தின் மற்ற பகுதிகளைச் சோந்த ரவுடிகளும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர் சிவரிடம் உணமை கண்டறியும் சோதனை நடத்தியும் வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனினும் விசாரணை சரியான கோணத்தில் செல்வதாக அதிகாரிகள் கூறிவந்தனர்


இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி ஜெயக்குமார், திருவாரூர் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். சிறப்பு புலனாய்வு குழுவை உள்ளடக்கிய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு இதுவரை யாரையும் நியமித்து  அரசு உத்தரவிடவில்லை இதனால் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு அடுத்து எஸ்பியாக யார் நியமிக்கப்படுவார். ராமஜெயம் வழக்கு முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது ஆட்சி மாறினாலும் காட்சி மட்டும் மாறாது போல எத்தனை முறைதான் இடைவேளை விடுவார்களோ.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision