தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்: திருச்சியின் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் நிலவரம்:

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்: திருச்சியின் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் நிலவரம்:

ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறைக்குச் சென்றது, பன்னீரின் தர்மயுத்தம் என பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் தேர்தலை ஆளும்கட்சியே தள்ளிப்போட்டு வந்தது. நீதிமன்றமே தேர்தலை நடத்த வற்புறுத்தியும், தேர்தலை நடத்த அ.தி.மு.க அரசு தயாராகயில்லை. மூன்றாண்டுகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல்தான் தமிழக உள்ளாட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் இப்போது வரையிலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுட்ட தமிழக அரசுக்கு முற்றுப்புள்ளி.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்த விவகரத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், வரும் `டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்’ என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.வாக்குப்பதிவுவாக்குப்பதிவு அப்போது பேசிய ஆணையர் பழனிசாமி, “தமிழகத்தில் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தினங்களில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். வரும் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் டிசம்பர் மாதம் 13-ம் தேதி. இருகட்டங்களாக பதிவாகும் வாக்குகள் வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி எண்ணப்படும்” என்று அறிவித்தார்.

திருச்சி பொருத்தவரை உள்ளாட்சி தேர்தலில் 1 மாநகராட்சி 3 நகராட்சி 16 பேரூராட்சிகள் அடங்கும்.
மணப்பாறை(27 வார்டு), துறையூர்(24 வார்டு), துவாக்குடி(21 வார்டு) ஆகிய மூன்று நகராட்சிகளும் பாலகிருஷ்ணன்பட்டி(15 வார்டு), கல்லக்குடி(15 வார்டு), காட்டுப்புத்தூர்(15 வார்டு), கூத்தப்பர்(18 வார்டு),லால்குடி(18 வார்டு), மண்ணச்சநல்லூர்(18 வார்டு), மேட்டுப்பாளையம்(15 வார்டு), முசிறி (18 வார்டு), பொன்னம்பட்டி(15 வார்டு), பூவாளூர்(15 வார்டு),புள்ளம்பாடி(15 வார்டு), எஸ்.கண்ணணூர்(15 வார்டு), சிறுகனூர்(15 வார்டு), தொட்டியம்(15 வார்டு), உப்பிலியபுரம்(15 வார்டு), தாந்தையங்கார்ப்பட்டி(15 வார்டு) ஆகிய பேரூராட்சிகளும், திருச்சி 1 மாநகராட்சி(65 வார்டு) அடங்கியது திருச்சி மாநகராட்சி.

ஒவ்வொரு வார்டுகளை பற்றிய முழுமையான விரிவான தகவல்களை விரைவில் வழங்க காத்திருக்கிறது உங்கள் திருச்சி விஷன்.
இணைந்திருங்கள் இந்த உள்ளாட்சித் தேர்தலை உங்கள் திருச்சி விஷனோடு.