சிறந்த கல்வியோடு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதில் சிறந்து விளங்கும் திருச்சி காவேரி மகளிர் சுயநிதி கல்லூரி

சிறந்த கல்வியோடு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதில் சிறந்து விளங்கும் திருச்சி காவேரி மகளிர் சுயநிதி கல்லூரி

மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிப்பதோடு அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையையும் முன்னேற்றுவதற்காக பல வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதிலும் மாணவர்களின்  திறமையை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. திருச்சி காவேரி மகளிர் சுயநிதி கல்லூரி. கல்லூரியில் பயிலும் மாணவர்களின் திறமையை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் எதிர்கால வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவர்கள் வேலை பெறுவதற்காக தங்களை முழுமையாக தயார் படுத்திக் கொள்வதற்கு கல்லூரி நிர்வாகத்தால் செயல்படுத்தப்படும் placement cell மூலம் பல திறன் மேம்பாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு  செய்து வருகின்றனர்.

திறன் மேம்பாட்டு நிகழ்வுகளை மாணவர்கள் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்காக பல்வேறு தொழில் நிறுவனங்களில் இருந்து தொழில் முனைவோர்களை வரவழைத்து அவர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியும் ஊக்கமும் அளித்து வருகின்றனர். திறன் மேம்பாட்டு நிகழ்வுகளில் மாணவர்களுடைய வெளிநாட்டு கல்வி திறனை மேம்படுத்துவது அவர்களுடைய எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவது அவர்களது தனித் திறனை மேம்படுத்துவது போன்ற  தலைப்புகளில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்ட நிறுவனங்களில் இருந்து வல்லுனர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி  அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி  போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக அவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் அளிக்கப்படுகின்றது. 

IT நிறுவனங்களான  

WIPRO, CTS, TCS, IGATE, - VDART, HCL, TECH MAHINDRA & VIRTUSA, 

கல்விநிறுவனங்களான

RR CAMBRIDGE, Kallakurichi

Big Temple International School, Tanjore

Saradha School, Salem

Mahatma School, Thuraiyur

Medical Coding - Omega, eit

Others Capgemini, SPS, Zealous, - Sutherland, Winners Education போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தருகின்றனர். வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் அதிகமாக வேலைவாய்ப்புகளை பெற்று செல்கின்றனர்.

இந்த ஆண்டு 2019-20 ஆம் கல்வி ஆண்டில் 16 நிறுவனங்களிலிருந்து நடத்தப்பட்ட நேர்காணலில் 333 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். BAJAJ Finserv Ltd & Bajaj Finance pune, Global Talent track, pune EIT மதுரை போன்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn