இரண்டாம் நிலைக் காவலருக்கான இலவச பயிற்சி வகுப்பு - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

இரண்டாம் நிலைக் காவலருக்கான இலவச பயிற்சி வகுப்பு - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால், ஆயுதப்படை, சிறப்பு காவல்படை, சிறைக்காவலர் / தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்கள் உள்ளிட்ட 3359 இரண்டாம் நிலைக் காவலர் (PC) பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து, இப்போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (04.09.2023) திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. இத்தேர்விற்கு 18 வயது முதல் 26 வயதுக்கு மிகாமல் உள்ள போட்டித்தேர்வர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக (17.09.2023) வரை விண்ணப்பிக்கலாம். 

மேலும், பிற்பட்ட வகுப்பினருக்கு - (28), ஆதிதிராவிடர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் - (31), ஆதரவற்ற விதவை – (37) மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு (47) வயதும் வயது தளர்வாக வழங்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை கல்வித்தகுதியுடைய விருப்பமுள்ள போட்டித்தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறும்,

இதுதொடர்பான விவரங்களுக்கு 0431-2413510, 9499055901 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision