எடப்பாடியார் - அவர்தான் இந்த நாட்டின் பிரதமர் - முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு

எடப்பாடியார் - அவர்தான் இந்த நாட்டின் பிரதமர் - முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு

அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், துறையூர் சட்டமன்ற தொகுதி, கீரம்பூர் எம்ஜிஆர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

துறையூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வெங்கடேசன் ஏற்பாட்டில், அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி... அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை ஏற்றுக் கொண்டு பாரதிய ஜனதா கட்சியுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்தவர் பொதுச் செயலாளர் எடப்பாடியார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தல் ஆனாலும் சரி இனி எந்த தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என அறைகூவல் விடுத்தவர் எடப்பாடியார். தமிழகம் முழுவதும் உள்ள நிலையை பார்க்கும் பொழுது, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். அதிமுகவின் 40 நாடாளுமன்ற தொகுதிகளின் எம்பிக்கள் இல்லாமல் மத்தியில் ஒரு பிரதமர் யாரும் வர முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் யாரை கை காட்டுகிறாரோ, யாரை ஆதரிக்கிறாரோ அவர்தான் இந்த நாட்டின் பிரதமர் என்ற நிலை வந்திருக்கிறது.வீழ்த்தப்பட்டு தமிழகத்தில் மக்களின் ஆதரவு, மக்களின் எழுச்சி இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 40 இடங்களிலும் வெற்றி பெற்று, செங்கோட்டையில் அதிகாரம் மிக்கவராக எடப்பாடியார் திகழ்வார். 

அதனைத் தொடர்ந்து, திமுக அரசின் முதல்வராக இருக்கக்கூடிய ஸ்டாலினின் ஆட்சி வீழ்த்தப்பட்டு, தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் வர இருக்கிறார் என்றார். முன்னதாக, கீரம்பூர் பகுதியில் கழக கொடியினை ஏற்றி வைத்து, மறைந்த தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், துறையூர் நகரச் செயலாளர் அமைதி பாலு, முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, தகவல் பிரிவு ஆம்பூர் சுரேஷ் ராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision