மரணத்திலும் 5 மனிதர்களுக்கு உயிர்கொடுத்த இளைஞர் -திருச்சி SRM மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

மரணத்திலும் 5 மனிதர்களுக்கு உயிர்கொடுத்த இளைஞர் -திருச்சி SRM மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த  சத்தியமூர்த்தி 28 வயது இளைஞர் கடந்த 17ம் தேதி சாலை விபத்தில் காயமடைந்து SRM மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் இயன்ற வரை போராடியும் இளைஞர் மூளை சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.துரிதமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் உடல் உறுப்பு தானம் பற்றி எடுத்துக்கூறி அதற்கு இளைஞரின் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்றனர்.

பின்னர் TRANSTAN ன் ஒப்புதல் பெற்று இளைஞரின் இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தானமாக பெறப்பட்டு    5 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு வழங்கப்பட்டது.

அறுவை சிகிச்சை ஏற்பாடுகளை டாக்டர் விஜய்கண்ணா மற்றும் குழுவினர் டீன் டாக்டர் ரேவதி  மற்றும் SRM குழும தலைவர் திருச்சி மற்றும் இராமாபுரம் டாக்டர் சிவக்குமார் ஆலோசனையின் பேரில் சிறப்பாக செய்தனர்.மருத்துவமனை நிர்வாகம் இப்புனிதமான செயலுக்கு ஒப்புதல் அளித்த இளைஞரின் உறவினர்கள், உதவிய காவல்துறை மற்றும் KAPV அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

சாதாரண விவசாய குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் தன்னுடைய மகன் இறந்தும் 5 மனிதர்களுக்கு உயிர் கொடுத்து அவர்கள் வாழ்வதை நினைத்து தூக்கத்திலும் கண்கலங்கி நின்ற பெற்றோர்கள் அனைவரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn