திருச்சி மாநகராட்சி வார்டில் இரண்டு ஓட்டு போட்ட திமுக வேட்பாளரால் பரபரப்பு - வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கடும் வாக்குவாதம்
திருச்சி மாநகராட்சி 56 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி, திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள 647 ஆம் எண் வாக்குச்சாவடியில், வரிசை எண் 673 ல் உள்ள முத்துலெட்சுமி என்பவரது வாக்கை, கையெழுத்திட்டு தவறுதலாக கள்ள ஓட்டாக பதிவிட்டுள்ளார்.
பின்னர் அவர் 646 எண் வாக்குச்சாவடியில், வரிசை எண் 673 ல் உள்ள தனது வாக்கினை திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பதிவு செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த மற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் வாக்காளர் முத்துலட்சுமி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பாலாஜி புகார் தெரிவித்தார் விசாரணை நடத்திய அலுவலர் அவருக்கு டெண்டர் ஓட்டு முறையில் வாக்களிக்க வாய்ப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இரண்டு வாக்கை பதிவு செய்த திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி இடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் உண்மை நிரூபிக்கும் பட்சத்தில் 56 வது வார்டில் வேட்பாளர் பட்டியலில் இருந்து அவர் நீக்கம் செய்யப்படுவார் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்குறுதி அளித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.me/trichyvisionn