திருச்சி எஸ்.பியிடம் ஹிந்தியில் பேசிய திமுக பிரமுகர் !!

திருச்சி எஸ்.பியிடம் ஹிந்தியில் பேசிய திமுக பிரமுகர் !!

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.இதனிடையே மதுரை ரோடு அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் வார்டு எண் 24, 25, 26 ஆகிய பகுதிகளுக்கான வாக்குச்சாவடி மையத்தின் 100 மீட்டர் உட்பட்ட பகுதியில் அனைத்து கட்சியினரும் தங்களது தேர்தல் அலுவலகங்களை அமைத்துள்ளனர். 

 தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் அரசியல் கட்சியினரின் தற்காலிக தேர்தல் அலுவலகங்களை அகற்ற போலீசார் உத்தரவிட்டனர்.ஆனால் அரசியல் கட்சியினர் தேர்தல் அலுவலகங்களை அகற்றப்படாத நிலையில், வாக்கு சாவடி மைய பகுதிக்குள் விதிமுறை மீறியுள்ள அலுவலகங்களை அகற்றாவிட்டால் அரசியில் கட்சியினர் மீது கைது நடவடிக்கை எடுக்கபடும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த திமுக, மதிமுக நிர்வாகிகள் ஏடிஎஸ்பி பால்வண்ணன், டிஎஸ்பி ஜனனி பிரியா உள்ளிட்ட போலீஸாரிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் அலுவலகங்களை அகற்ற மறுத்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

https://youtu.be/tQg38K3VGYU

இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் துறை கண்காளிப்பாளர் சுஜீத் குமார்  பிரச்சனைக்குரிய இடத்திற்கு வந்து தேர்தல்  அலுவலகத்தை காவல்துறை மூலம் அப்புறப்படுத்தினார்.அப்போது திமுகவை சேர்ந்த ஆனந்த் என்பவர் திருச்சி எஸ்பியிடம் ஹிந்தி மொழியில் பேசினார். அவரும் அதைக் கேட்டுக்கொண்டு மீண்டும் இருவரும் பரஸ்பரமாக வணக்கம் தெரிவித்தனர். முன்னதாக இந்தியில் பேசிய திமுக பிரமுகர் உடனடியாக வாக்காளர்களுக்கு இடையூறு இல்லாமல் மேசை நாற்காலிகளை எடுத்து விடுவதாகவும் குறிப்பிட்டார் .திருச்சி எஸ்பி சுஜித்குமாருக்கு தமிழில் பேசினால் புரியும் . அவர் தமிழில் பேசி தான் எச்சரிக்கை விடுத்து இடையூறாக உள்ள நாற்காலி, டேபிள் களையும் எடுக்க சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அங்கிருந்து சிரித்த முகத்துடன் எஸ்பி புறப்பட்டு சென்றார் . ஹிந்தி தெரியாது போடா என பல்வேறு வாசகங்களை எழுதி திமுகவினர் தமிழகத்தில் கடந்த வருடம் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். தற்போது திமுக பிரமுகரே ஹிந்தியில் பேசியது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn