தெருவோர தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

தெருவோர தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

தெருவோர தரைக்கடை, சிறுகடை வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அனைவருக்கும் வியாபாரச் சான்று (ஸ்மார்ட் கார்டு) வழங்க வேண்டும், கணக்கெடுப்பு பட்டியலை வெளியிட்டு ஒப்புதல் பெற்று வணிகக் குழு தேர்தலை நடத்த வேண்டும். தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ,ஊராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை அதிகாரிகளின் சட்ட விரோத மற்றும் அத்துமீறல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த கோரியும், வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் முறையாக திரும்ப செலுத்தவும் சிறப்பு திட்டம் கொண்டு வந்து செயல்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் ஏஐடியுசி

 தலைமையிலான தெருவோர சிறுகடை, தரைக்கடை வியாபாரிகள் சங்க ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டத்தில் ராமகிருஷ்ணா தியேட்டர் மேம்பாலம் அருகில் சங்கத் தலைவர் எஸ். சிவா தலைமையில் பிப்ரவரி 28 காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது.திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலாளர் க.சுரேஷ் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்சர்தீன்,கட்டட சங்க மாவட்ட தலைவர் முருகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் உரையாற்றினர் .

சங்கத்தின் நிர்வாகிகள் சரவணன், மேகராஜ், சந்தோஷ் ,சுரேஷ் முத்துசாமி முன்னிலை வகித்தனர். சங்கத்தின் பொருளாளர் அபுதாகிர் நன்றி கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision