திருச்சி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு - ஆட்சியர் தகவல்!!

திருச்சி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு - ஆட்சியர் தகவல்!!

Advertisement

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் வருவாய் கிராம அளவில் நெல் பிர்கா அளவில் நிலக்கடலை, நெல் தரிசில் உளுந்து மக்காச்சோளம், உளுந்து சோளம் எள் மற்றும் கரும்பு பயிர்களில் பயிர் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement

திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வேளாண்மை துறையின் மூலம் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை பயிருக்கு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ. 409.50/- செலுத்தி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 01.02.2021 ஆகும். 

நெல் தரிசில் உளுந்து பயிருக்கு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு 

ரூ.192.15/- செலுத்தி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.02.2021 ஆகும். நெல் பயிருக்கு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ. 511.50/- பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 22.02.2021 ஆகும்.

மக்காச்சோளம் பயிருக்கு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ. 360/- உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 248.25/- சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 162.75/- செலுத்தி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 01.03.2021 ஆகும். எள் பயிருக்கு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ. 204.75/- செலுத்தி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 31.03.2021 ஆகும். கரும்பு பயிருக்கு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ. 2650/- செலுத்தி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 31.10.2021 ஆகும். 

எனவே, இதுவரையிலும் காப்பீடு செய்யாத விவசாயிகள் இவ்வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி தங்களது முன்மொழிப் படிவம், பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல்நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் அருகாமையில் உள்ள பொது சேவை மையங்களிலோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

Advertisement

எனவே, விவசாயிகள் அனைவரும் இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் இழப்பீடுகளில் இருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்ள பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொள்கிறார்.