திருச்சி திமுகவின் அன்பில் மகேஷை விமர்சித்த ஒன்றிய செயலாளர் - தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்த தலைமை கழகம்!!

திருச்சி திமுகவின் அன்பில் மகேஷை  விமர்சித்த ஒன்றிய செயலாளர் - தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்த தலைமை கழகம்!!

Advertisement

திமுகவின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை விமர்சித்து பதிவிட்ட திமுக ஒன்றிய செயலாளர்- அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்த திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Advertisement

திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவரை விமர்சித்து, திமுகவின் திருவரம்பூர் ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தகாத வார்த்தைகளாலும், அடிப்படையிலிருந்து கட்சிக்கு வராமல், அப்பா தாத்தா பெயரை வைத்து அரசியல் நடத்துவதாகவும், பல இடங்களில் கோடிக்கணக்கில் திமுகவின் பேரைச்சொல்லி வசூல் செய்வதாகவும் தொடர் விமர்சனங்களை முன்வைத்து முகநூலில் தொடர் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

இது திருச்சி மாவட்ட திமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பலரும் இத்தகைய பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று திமுகவின் தலைமை கழகம் முரசொலி நாளிதழில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதற்காக நவல்பட்டு விஜி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் திமுக ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement