எண் 6ல் அசுரகுரு உள்ளதால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் - திருச்சி பிரபல எண்கணித ஆய்வாளர் பகீர் தகவல்!!
Advertisement
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இன்று அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் விடாது அதி தீவிர பிரச்சாரத்தை அரசியல் கட்சியினர் மேற்கொண்டனர். இந்த நிலையில்தான் திருச்சியின் பிரபல எண்கணித ஆய்வாளர்(நியூமராலஜிஸ்ட்) சுரேஷ் ஆழ்வார் திருச்சி விஷன் இணையதளத்திற்கு பகீர் தகவல்களை அளித்துள்ளார். அதனுடைய சிறப்பு தொகுப்பு தான் இது!!
Advertisement
திருச்சியின் பிரபல எண்கணித ஆய்வாளர் சுரேஷ் ஆழ்வார் கூறுகையில்...."எண் கணிதம் என்பது நம்முடைய தினசரி காலண்டரில் பின்புறம் வரும் ஒன்று. இதைப் பற்றி தான் நாம் சில தகவல்களை பேச உள்ளோம். நியூமராலஜி என்பது ராஜாகளைப் பற்றிப் பேசக் கூடியது, ராஜ்ஜியம் ஆழ்பவர்களை சொல்லக்கூடிய ஒன்று. அப்படி நாம் தமிழகத்தை எடுத்துக் கொண்டோம் என்றால் நியூமராலஜிப்படி 29 என்ற எண் வரும். அதனை கூட்டினால் 2 வரும். இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ச்சியாக ஐந்து வருடம் ஆட்சி செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தை ஆள்பவர்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் 6, 7, 8 என்ற எண்ணில் வரவேண்டும்.
அப்படி பார்க்கப்போனால் காமராஜரின் பிறந்தநாள் தேதி 15ம் தேதி 6வது எண் வரும். கலைஞரின் பிறந்த தேதி மாதம் வருடம் கூட்டினால் 7 வரும். ஜெயலலிதா பிறந்த நாள் 24 (2+4) கூட்டினால் 6 வரும். எம்ஜிஆர் பிறந்த தேதி 17வது மாதம் 8 தேதி ஆகும். இவர்கள் அனைவரும் ஆட்சி அமைத்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் தேதி என்பது (2/3/1954) இதை கூட்டினால் எண் 6 வரும். இந்த 6ம் எண் என்பது தமிழகத்திற்கு மிகவும் ராசியான நம்பர். 6ம் எண்ணில் அசுரகுரு உள்ளதால் இந்த முறையும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தான் வருவார்.
Advertisement
இவருடைய பிறந்த நாள் மற்றும் மாதத்தை கூட்டினால் எண் 5 வரும். இது எண் வந்து அனைவரையும் அனுசரித்து செல்வதற்கான ஒரு எண்ணாகும். சொல்லப்போனால் காமராஜருக்கு பிறகு ஒரு எதிர்ப்பு எண் இல்லாத நபர் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான்.
திமுகவைப் பொறுத்த வரை அனைவருமே கலைஞருடைய ராசிகாரர்கள் தான். துரைமுருகன், நேரு உள்ளிட்டோர் அனைவருடைய எண்களும் 3ல் தான் வரும். 4கிற்கு 3ம் எண் எப்போதும் எதிர் நம்பர். அப்படி திமுகவில் இருக்கும் அனைவரையும் எடுத்துக்கொண்டோம் என்றால் அது எதிர் நம்பரா தான் வருகிறது. உதாரணமாக உதயநிதி ஸ்டாலினை எடுத்துக் கொண்டாலும் அவருடைய பிறந்தநாள் தேதியை கருத்தில் கொண்டால் எண் 9 வருகிறது" என்றார்.
Advertisement
தமிழகத்தில் உள்ள அனைத்து பிரபல தொலைக்காட்சிகளும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளதே என்ற கேள்விக்கு.... அனைத்து தொலைக்காட்சிகளும் ஒரு திணிப்பின் காரணமாக தான் திமுக ஆட்சி அமைக்கும் என்கின்ற கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளனர். உதாரணமாக பிரசாந்த் கிஷோர் என்பவர் பீகார் மாநிலத்தில் தோல்வியை தழுவினார். அதேபோல தமிழகத்திலும் திமுக தோல்வியைத் தழுவும். எண் 6ல் அசுரகுரு உள்ளதால் நிச்சயமாக எடப்பாடி கட்சி தான் ஆட்சி அமைக்கும். இவ்வளவு ஏன் தேர்தல் நடக்கும் தேதி கூட 6ம் தேதி தான்" என்றார் பிரபல நியூமராலஜிஸ்ட் சுரேஷ் ஆழ்வார்!!
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய