திமுக கவுன்சிலரை அடித்து கைகலப்பு தகராறு – தாக்கிக்கொண்ட திருச்சி திமுகவினர்.

திமுக கவுன்சிலரை  அடித்து கைகலப்பு  தகராறு –  தாக்கிக்கொண்ட திருச்சி திமுகவினர்.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுவரும் நிலையில், திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஆட்சியர் சிவராசு கலந்துக்கொண்டு சொட்டுமருந்து முகாமினைத் தொடங்கி வைத்தார். அப்போது மிளகுப்பாறை பகுதியைச் சேர்ந்த 54வது வார்டு திமுக கவுன்சிலரான புஷ்பராஜ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த போது, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த 55வது வார்டு திமுக கவுன்சிலரான ராமதாசும் ஆட்சியர் பங்கேற்ற நிகிழ்வில் பங்கேற்று ஆட்சியருக்கு பின்னால் நின்று போஸ் கொடுத்ததாகவும், இதனால் ஆட்சியர் நின்றுக்கொண்டிருந்தபோது எனது வார்டுக்கு எப்படி வரலாம் என புஷ்பராஜ் கேட்டபோது, பதலளித்து விட்டு ராமதாஸ் அங்கிருந்து நகர்ந்தார்.

https://youtu.be/kr8Pq9YcjkY

அதேநேரம் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் மற்றும் போட்டோவுக்கு போஸ்கொடுப்பதில் திமுக கவுன்சிலர் ராமதாஸ் முந்திக்கொண்டதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஆரம்ப சுகாதார மையம் முன்பு திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஆதரவாளர்களும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருவரையும் சமாதானப்படுத்த முயன்றும் தகாதவார்த்தைகளால் திட்டியவாறு அங்கே நின்றுக்கொண்டிருந்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன், இப்பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாக மாறும் எனவும் தெரிகிறது. வாக்களித்த பொதுமக்கள் முன்னிலையிலேயே கவுன்சிலராக பதவியேற்கும் முன்னரே திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுகவினர் தாக்கிக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO