உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள் - வடிவமைத்து அசத்திய சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்!

உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள் - வடிவமைத்து அசத்திய சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்!

உலகில் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்து அசத்தியுள்ளார் தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்.

Advertisement

தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்தவா் S.ரியாஸ்தீன்(18). இவா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் வடிவமைத்துள்ள உலகின் எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள் 2021ம் ஆண்டில் நாசா விண்வெளித் தளத்திலிருந்து ஏவப்பட உள்ளது.

இவர் " க்யூப்ஸ் இன்ஸ்பேஸ்" என்ற உலகளாவிய புதிய கண்டுபிடிப்புக்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இப்போட்டிக்காக இவர் வடிவமைத்துள்ள சிறிய செயற்கைகோள் நாசா ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்பப்பட உள்ளது. 33 கிராம் எடையும் 37 மில்லி மீட்டர் உயரமும் கொண்ட செயற்கைக்கோள் உலகிலேயே எடை குறைந்த பெம்டோ வகை செயற்கைகோள் ஆகும். பாலி எதிரி இமைடு அட்டம் எனப்படும் தெர்மோ பிளாஸ்டிக்கை பயன்படுத்தி 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள செயற்கைகோளுக்காக ரியாஸ்தீன் இந்த உலகளாவிய பரிசை பெற்றிருக்கிறார்.

Advertisement

நாசா ஏற்பாடு செய்த இந்த போட்டியில் 73 நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னை சேர்ந்த INRO ஆய்வகத்தால் பயிற்சி பெற்ற இவரது இரண்டு செயற்கை கோள்கள் 11 சென்சார்கள் கொண்டது. இவற்றின் மூலம் 17 அளவுருக்களை பதிவு செய்ய முடியும். விஷன் சாட் V1 எனப்பெரியடப்பட்ட செயற்கைகோள் நாசாவின் SR-7 ராக்கெட் மூலம் ஜூன் 2021ல் அமெரிக்காவின் வெர்ஜீனியாவிலிருந்து விண்ணில் ஏவப்படும். மற்றொரு செயற்கைகோளான சாட் V2 நாசாவின் RB- பலூன் ராக்கெட் திட்டத்தின் மூலம் ஆகஸ்டு 2021 ல் ஏவப்படவுள்ளது.

இந்நிலையில் சாஸ்த்ரா TBI மையத்தின் மூலம் ரூபாய் 5 லட்சம் இங்குபேசன் மானியத்தொகை அந்த மாணவருக்கு வழங்கப்படும் என்று சாஸ்த்ராவின் துணைவேந்தர் டாக்டர் எஸ். வைத்தியசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இத்தொகையை கொண்டு இம்மாணவர் தனது விருப்பத்துறையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கலாம் எனவும் தெரிவித்தனர்.

உலகில் மிக சிறிய செயற்கை கோளை கண்டுபிடித்தது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த ரியாஸ்தீனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது‌.