கொரோனா தொற்றில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்காக மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு ஏற்பாடு

கொரோனா தொற்றில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்காக மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு ஏற்பாடு

மத்திய மண்டலத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து குழந்தைகளை பாதுகாக்க மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 12 குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் இருவரையும் கொரோனா தொற்றால்  இழந்துள்ளனர். இந்த குழந்தைகளின் எதிர்காலத்தில் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு காவல்துறை சார்பில் நாமும் துணை நிற்க வேண்டும் இது முழுக்க முழுக்க தன்னார்வமாக செய்ய வேண்டும்.

மத்திய மண்டலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் அனைவரும் 12 குழந்தைகளை நல்வழிப்படுத்தி அவர்களை கண்காணிப்பது மிகப்பெரிய வேலை அல்ல விருப்பமுள்ளவர்கள் காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளிடம்  தெரிவித்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த குழந்தைகள் தீய பாதையில் செல்லாமல் நல்வழிப்படுத்துவதற்காக அவர்களுடைய காப்பாளர்களோடு சேர்ந்து நாமும் ஒரு காப்பாளர்களாக அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

அவர்களுக்கு தேவையானவற்றை நம்மால் முடிந்த வகையில் வாரத்தில் ஒருமுறை அவர்களை நேரில் சென்று பார்ப்பது அல்லது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தல் இப்படி அக்குழந்தைகளோடு  எப்போதும் தொடர்பில் இருந்து அவர்கள் கல்வியில் வேலைவாய்ப்பில் ஒரு சிறந்த துறையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு வழிகாட்டியாக நாம் செயல்பட வேண்டும்.

இந்த குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை பெறுவதற்குஎனை உட்பட ஒரு வாட்ஸ் ஆப் குழு அமைத்து விருப்பமுள்ள அனைவரும் இணைந்து அதில் அந்த குழந்தைகளுக்கு தேவையானவற்றை பகிர்ந்து கொள்ளலாம். நம்மால் முடிந்த வகையில் அந்த குழந்தைகளுக்கு உறுதுணையாகவும் அவர்கள் வாழ்க்கைக்கான ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் செயல்படவேண்டும். 

அந்தக் குழந்தைகள் பற்றிய தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது மிக முக்கியமான ஒன்று. இந்த திட்டத்திற்கு திருச்சி மற்றும் நாகப்பட்டினத்திற்கு தலா ஒரு காவலர்களும்,  கரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா இரண்டு காவலர்களும் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா மூன்று காவலர்களும் தேவை. இதில் விருப்பம் தெரிவிக்கும் காவலர்களுக்கு குழந்தைகளிடம் எவ்வாறு பழக வேண்டும். அவர்களிடம் அவர்களுடைய தேவையை எவ்வாறு தெரிந்து கொள்வது போன்ற அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும் அதுமட்டுமின்றி அந்த வாட்ஸ்அப் குழுவில் உதவி தேவைப்படும் தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் கிடைத்திட உறுதி செய்வேன்.

இதில் அதிகமாக விருப்பம் தெரிவிக்கும் காவலர்கள் இருப்பின் கொரானா தொற்றால்  பெற்றோரில் ஒருவரை  இழந்த குழந்தைகளையும் நாம் தேர்ந்தெடுத்து கண்காணிக்கலாம். இது போன்ற பேரிடர் காலத்தில் மக்களை முன்னின்று பாதுகாக்க முன்கள பணியாளர்களாக இருக்கும் நாம் அவர்களுடைய வாழ்க்கையில்  நல்ல பாதையில் செல்வதற்கான முன்னோடியாகவும் திகழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC