ஆட்சியில் அரசர் ... தேர்தல் வந்தால் பபூன் !!

ஆட்சியில்  அரசர் ... தேர்தல் வந்தால் பபூன் !!

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வழங்கும் நடைமுறை முதன் முறையாக 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அமலுக்கு வந்தது. இந்த பத்திரங்கள் வெளியீட்டுக்கான தேதி அவ்வப்போது வெளியிடப்படும். அந்த வகையில் 28வது வெளியீட்டுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, வரும் 4ம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு நன்கொடை பத்திரங்கள் விற்பனைக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது... அக்டோபர் 4ம் தேதி தேர்தல் பத்திரங்களின் 28 வது தவணை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு ஒரு பொன் அறுவடையாக இருக்கும். கடந்த கால பதிவுகளின்படி, அநாமதேய நன்கொடைகள் என்று அழைக்கப்படும் 90 சதவிகிதம் பாஜவுக்குச் செல்லும். பெரு முதலாளிகள் டில்லியில் உள்ள ஆண்டவருக்கும், எஜமானருக்கும் தங்கள் காசோலை புத்தகங்களைத் திறப்பார்கள். தேர்தல் பத்திரங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்ட லஞ்சம். இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பதில் பதிவு அளித்து வருகின்றனர், நீங்கள் ஆட்சியில் இருந்த பொழுது எவிவித கணக்கு வழக்குகளும் இல்லாமல் கால்லா கட்டினீர்கள் நல்லா இப்பொழுதாவது வங்கிகள் மூலம் தானே பரிவர்த்தனை நடைபெறுகிறது. கவலைப்படாதீர்கள் நீங்கள் ஆட்சிக்கு வந்து வந்தால் ஊழல் வழக்கு தொடுங்கள் என கமெண்ட்டிட்டு வருகிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision