பங்குச்சந்தை : அடுத்த வாரம் நச்சுனு நான்கு நாட்கள்தான் !!

பங்குச்சந்தை : அடுத்த வாரம் நச்சுனு நான்கு நாட்கள்தான் !!

சென்ற வாரம் பட்டைய கிளப்பின பங்குச்சந்தைகள் என்றே சொல்ல வேண்டும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணங்களை எடுத்துச் சென்றது, சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளில் சரிவு, இந்திய முதலீட்டாளர்கள் லாபம் பார்க்கும் வகையில் பங்குகளை விற்றது ஆகியவை எல்லாம் சேர்ந்து, கடந்த வாரத்தின் தொடக்கத்தில் சந்தைகளை சிறிது கீழே எடுத்துச் சென்றது.

பங்குச் சந்தைகளின் வாராந்திர வர்த்தக முடிவு நாளான வெள்ளிக்கிழமையில், மும்பை பங்குச்சந்தை 320 புள்ளிகள் உயர்ந்து 65,828 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 19,638 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. இன்று பங்குச்சந்தைகளுக்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அமெரிக்க மைய வங்கி பொருளாதார முன்னேற்றம் சற்று முன்னேறி இருப்பதக்கவும், இன்னும் 45 நாட்களுக்கு வட்டியை உயர்ந்தும் எண்ணம் இல்லை எனக்கூறியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. ஆகவே நாளை முதல் மார்கெட் மீண்டும் சூடு பிடிக்கலாம்.

ஜே. எஸ். டபிள்யூ இன்ப்ரா கம்பெனியின் புதிய வெளியீடு அமர்க்களமாக செலுத்தப்பட்டு முடிவடைந்தது. மொத்தமாக 39.36 தடவைகளும், சிறிய முதலீட்டாளர்கள் பகுதி 10.87 தடவைகளும் செலுத்தப்பட்டு முடிவடைந்தது. அலாட்மெண்டும் வந்துவிட்டது. உங்களுக்கு இந்த கம்பெனியின் பங்குகள் அலாட் ஆகி இருந்தால் சுமார் 2000 முதல் 3000 ரூபாய் வரை லாபம் கிடைக்கலாம். தீபாவளி செலவுக்கு வீட்டுக்காரம்மாவுக்கு புடவை எடுக்க உதவலாம். இப்போது ஒரு பங்குக்கு கிரே மார்க்கெட்டில் 23 ரூபாய் அதிகமாக கிடைக்கிறது. நீண்டகால அடிப்படையில் வைத்துக் கொள்ளவும் இது ஒரு சிறந்த பங்காகும், பங்குச்சந்தையில் அலார்ட்மென்ட் கிடைக்காதவர்கள் நீண்டகால அடிப்படையில் இந்த பங்கை வாங்கி வைக்கலாம்.

பிளாசா ஒயர்ஸ், வாலியண்ட் லேபரட்டரி ஆகிய கம் பெனிகள் தங்களது புதிய வெளியீடுகளை இப்போது கொண்டு வந்துள்ளன. சிறிது ரிஸ்க் எடுக்க விரும்பும் முத லீட்டாளர்கள் புதிய வெளியீடுகளில் முதலீடு செய்யலாம். செப்டம்பர் காலாண்டு முடிவுகள் அடுத்த வாரத்திலிருந்து வரத் தொடங்கிவிடும். அப்படி வரும் காலாண்டு முடிவுகளில் நல்ல முடிவுகளை தரும் பங்குகளைப் பார்த்து முதலீடு செய்வது உங்களுக்கு பிற்காலத்தில் நல்ல லாபங்களை தரும்.

உலகெங்கிலும் உள்ள இந்திய பங்குகளின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், தலால் ஸ்டீரிட்டில் அதிக பணம் முதலீடுகள் செய்துள்ள முதல் 5 நாடுகள் யார் யார் என்று தெரிந்து கொள்வதில் நமக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். அப்படி இல்லை என்றாலும் தெரிந்து கொள்வதில் தவறில்லையே

1. அயர்லாந்து : முதலீடு செய்யப்பட்ட தொகை ரூபாய் 2,92,278 கோடி

2. மொரிஷியஸ் : முதலீடு செய்யப்பட்ட தொகை ரூபாய் 3,72,561 கோடி

3. லக்சம்பர்க் : முதலீடு செய்யப்பட்ட தொகை ரூபாய் 4,22,458 கோடி

4. சிங்கப்பூர் : முதலீடு செய்யப்பட்ட தொகை ரூபாய் 5,23,564 கோடி

5. அமெரிக்கா முதலீடு செய்யப்பட்ட தொகை ரூபாய் 22,69,903 கோடி.

இந்த மாதத்தின் முதல் நாளாக ஞாயிறு அமைந்துவிட்டது. அதேபோல 2ம் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தி ஜெயந்தி ஆகவே அன்றும் விடுமுறை ஆகவே நான்கு நாட்கள் மட்டுமே சந்தைகள் செயல்படும். வரும் காலங்களில் விடுமுறை நாட்கள் இடையில் வந்தால் சனிக்கிழமை பள்ளிக்கூடங்கள் செயல்படுவதுபோல பங்குச்சந்தையும் செயல்பட்டால் நன்றாகத்தானே இருக்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision