திருச்சி மாநகராட்சியின் இணையதள சேவைகளை மேம்படுத்த மக்கள் கோரிக்கை

திருச்சி மாநகராட்சியின் இணையதள சேவைகளை மேம்படுத்த மக்கள் கோரிக்கை

கொரானாவிற்கு பிறகு குடிமக்கள் சேவைகளை பெறுவதற்காக ஆன்லைன் தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் திருச்சி மாநகராட்சியின் இணைய தளத்தில் பல அம்சங்கள் புதுப்பிக்கப்படாததால் திருச்சியில் .வசிப்பவர்கள் அலுவலகங்களுக்கு நேரடியாக சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

குடிமை அமைப்பின் மெய்நிகர் இருப்பை மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் உறுப்பினர்களை குடியிருப்பாளர்கள் இப்போது எதிர்நோக்குகின்றனர்.

 மாநிலத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகள் உடன் ஒப்பிடும் போது இருபத்தி ஆறு ஆண்டுகள் பழமையான திருச்சி மாநகராட்சி இணையதளம் தனது பயனர்களுக்கு உகந்ததாக இல்லை.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் பெறுவதற்கும் படிவங்கள் மற்றும் விண்ணப்பம் புதிய குடிநீர் இணைப்புகள் காண செலவு மற்றும் கட்டிட திட்ட அனுமதி பற்றிய தகவல்களை பெறுவதற்கும் ஏற்பாடுகள் இருந்தாலும் அத்தகைய அம்சங்கள் www.trichycorporation.gov.in இல் இல்லை .

சொத்து வரி வசூல் நிலைகூட புதுப்பிக்கப்படவில்லை பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடி மக்கள் குறை தீர்க்கும்தளம் ஆன்லைனில் உள்ளது. ஆனால், அத்தகைய வசதியும் இங்கே இல்லை.

 2019ஆம் ஆண்டு வார்டு எல்லை நிர்ணயிக்கப்பட்டது வார்டுகளில் மாற்றங்கள் மற்றும் புதிய வார்டுகள் விவரங்களும் இணையதளத்தில் 

வெளியிடப் படவில்லை.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி பற்றி அதிகம் பேசப்பட்டாலும் மாநகராட்சி இணையதளம் பல ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டில் இல்லாமல் குடிமக்கள் மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று வருகின்றனர்.

  வாட்ஸ் அப் மற்றும் டுவிட்டரில் உள்ள பொதுவான ஆன்லைன் குறைதீர்க்கும் தளங்களும், 2017 தொடங்கப்பட்ட புகார் கண்காணிப்பு அமைப்புகளும் இப்போது செயல்பாட்டில் இல்லை குடியிருப்புவாசிகள் குடிமக்கள் குறைகளை நிலுவையில் வைத்துள்ளனர், ஆன்லைனில் கோரிக்கை வைக்க எந்த ஏற்பாடும் இல்லாததால் வேறு இடங்களில் குடியேறிய குடியிருப்பாளர்கள் தனது குறைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

இணையதளத்தை நவீன மயமாக்குவது குடிமக்களுக்கான சேவைகள் ஆன்லைனிலும் கிடைக்க செய்து விடுவது போன்ற வாக்குறுதிகளை வேட்பாளர்கள் கூறுவருவதால் கவுன்சில் உறுப்பினர்களிடம் இதற்கான தீர்வை பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn