வீட்டிலிருந்தே பணியாற்றுவதில் இருக்கும்  நன்மை தீமைகள் என்ன? மக்கள் கருத்து

வீட்டிலிருந்தே பணியாற்றுவதில் இருக்கும்  நன்மை தீமைகள் என்ன? மக்கள் கருத்து

 வீடு, அலுவலகம் என்று பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த உலகம் கடந்த   2020 மார்ச் மாதத்தில் கொரானா தொற்றுப்பரவல்  என்ற பெயரில்  முடங்கி போய்  வீடு மட்டுமே உலகம் என்ற நிலைக்கு நம்மை மாற்றியது. அலுவலகம் தனியார் நிறுவனம் என்று   வேலை பார்ப்பவர்களும் ஏன் தனியாக தொழில் செய்து கொண்டிருந்தவர்களும் வீடுகளிலேயே தங்களுடைய தொழிலை  தொடர்ந்து செய்வதற்கான நிலை ஏற்பட்டது.
Work from home  என்ற பெயரில் வீட்டிலிருந்தே பணியாற்றும்    நிலைக்கு வந்துள்ளோம்.  வீட்டிலிருந்தே வேலை செய்வது பலவகைகளில் நன்மை அளிக்கும் பட்சத்தில் உளவியல் ரீதியாகவும் தங்களுடைய  பொருளாதார ரீதியாகவும்  அவர்களுக்கு இது நன்மை பயக்கும் விதமாக அமைந்துள்ளதா ஏதேனும்  தீமைகள் இருக்கின்றனவா  என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சதிஷ் 
டீரிமர்ஸ் நடனப்பள்ளி 

திருச்சி கன்டோன்மென்ட் நகரில்  கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக எங்களுடைய  நடன பள்ளியை நடத்தி வருகிறோம் .
   பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள்  எங்களிடம் நடனம் கற்று வருகிறார்கள் கொரானா  என்பதால் பள்ளி கல்லூரிகளில் இல்லாததால் வகுப்புகள் நடைபெறுவது மிகவும் குறைவாக இருந்தது.
 தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
நடனம் என்பது நேருக்கு நேராக பார்த்து அவர்களுடைய உடல்  அசைவுகளை சரி செய்வதன் மூலமே திறமையை  மேம்படுத்த இயலும் ஆனால் இதுபோன்ற காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பொழுது அவர்களுக்கு சரியான முறையில் எங்களால் கற்றுக் கொடுக்க இயலாத நிலையிலும் அவர்களுக்கு  எளிதாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கின்றது.
 மேலும் வீடுகளில் இருந்து கற்றுக் கொள்வதால் சாதாரணமாக வாங்கும் கட்டணத்தொகையில் பாதித்தொகை  வாங்கும் நிலை.
 இதனால் பொருளாதார ரீதியாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது  வீட்டிலிருந்தே பணி செய்வது என்பது நன்மை என்னவென்றால் மற்ற மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கும் கலந்துக்கொள்ள. இணையவழி வகுப்புகள் மூலம் கொண்டு சேர்க்க முடிகிறது. 


  
சினிமேரி 
VDart நிறுவனம் 


 அலுவலகம் ,அலுவலகத்திற்கு செல்வதற்காக தயாராகுவது இப்படி அலுவலகம் என்றாலே ஒரு தனித்துவமான மகிழ்ச்சியை தருகின்றது பிறரோடு  பழகுவதற்கும் நண்பர்களோடு நமக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்கும் உளவியல் ரீதியாகவும்  ஒரு விதமான நல்ல அனுபவத்தை கற்றுத் தருகிறது.
 ஆனால் இப்பொழுது வீடுகளில் இருந்தே பணிபுரிவதால் அத்தகைய சூழலானது இல்லாமல் போய்விட்டது.
  வீட்டிலிருந்து பணிபுரியும்போது உறவுகளோடு அதிகம் நேரம் செலவழிக்கிறோம் ,
வீட்டில் உள்ளவர்களுக்கும்   நம்முடைய பணிச்சுமை என்ன என்பதை புரிந்து கொள்ளும் விதமாகவும் நமக்கு அமைந்துள்ளது.
 ஆனால், வீட்டிலிருந்த பணிபுரிவதால்   எங்களுடைய பணி காலஅளவு அதிகரிக்கப்பட்டுள்ளது அலுவலகத்தில் 8 மணி நேரம் வேலை என்றால்  12 மணி நேரம் கூட வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.குழுவில் இருக்கும் நண்பர்களை ஒருங்கிணைத்து வேலை செய்தல் என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.
   குறிப்பாக விடுமுறை நாட்கள் என்பது இல்லாமல் போய்விட்டது  தற்போது ஏழு நாட்களும் பணி செய்து கொண்டிருக்கிறோம் கடந்த 3 மாதகாலமாக ஏழு நாட்களும் பணிசெய்யும் சூழல்தான் உருவாகியுள்ளது.
 வீட்டிற்குள்ளேயே இருப்பதால் வேறொரு சூழலை பார்க்காமல் உளவியல் ரீதியாக மன அழுத்தம் ஏற்படுகிறது பல நேரங்களில் இதனால் நண்பர்களோடு பேச வேண்டும் என்றாலும்  மொபைல் வழியாகத்தான் என்பதால் அதனையும் தவிர்க்கவே தோன்றுகிறது இதனால் நாம்   தனிமைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது.

ரம்யா

தனியார் நிறுவனம்

சென்னையில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் கொரானா காலகட்டம் என்பதால் கடந்த ஆண்டே வீட்டிலிருந்து பணி செய்ய வேண்டும் என்று நிறுவனம் கூறியது.
 தொடர்ந்து ஓராண்டு காலமாக வீட்டிலிருந்து பணியாற்றி வருகிறோம் இதில் குறிப்பாக வீடுகளில் இருந்து பணியாற்றும் போது நல்ல உணவு, உறவினர்களோடு அதிகநேரம் செலவிடுதல் என்று பல நன்மைகள் இருக்கின்றது ஆனால் வேலை சுமை என்பது அதிகரித்துள்ளதாக நான் கருதுகிறேன், கிட்டத்தட்ட 12 மணி நேரம், வாரத்தில் ஏழு நாட்கள் என்று தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பதால் வேறு பணிகளின் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள அல்லது நம்மை புத்துணர்ச்சி செய்து கொள்ளவும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. 
ஊதிய உயர்வு பற்றி பேசுகையில் நிறுவனங்கள் அனைத்தும் எல்லோரையூம்  எச்சரிக்கும் விதமாக உங்களுக்கு வேலை இருக்கிறது எத்தனையோ பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் நிறுவனங்கள் அனைத்தும் கூறும் ஒற்றை சொல்லாக இருந்து கொண்டிருக்கிறது. 
அலுவலக அமைப்பு என்பது வீடுகளைப் பொறுத்தவரை கிடைப்பதில்லை அந்த சூழலியல் அமைப்பு, நாம் பணியாற்றுவதற்கான கால இடைவெளி என்பது குறைந்துள்ளது.

சரவணண்
VDart நிறுவனம் 


அலுவலகம் மற்றும் வீடு என்பது  எப்பொழுதுமே இருவேறு சூழல் அமைப்பு தான்.
அலுவலகத்தில் பணியாற்றும் போது சக நண்பர்களோடு கலந்தாலோசிப்பது நம்முடைய பணியில் முன்னேற்றத்தை பகிர்ந்து கொள்வது என்று நம்மை நாமே புத்துணர்வோடு வைத்துக்கொள்ளவும் ஊக்கப்படுத்திக்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால், வீடுகளில் நம்மை நாமே நம்மை பற்றிய புரிதலை பெறுவதற்கான கால சூழல் ஏற்படுவதில்லை.
அதுமட்டுமின்றி வீடுகளில் பணியாற்றும்போது நமக்கான ஒரு ஒழுங்கு ,கால நேரம் என்று எதனையும் பின்பற்றாமல் இருப்பது மிகப் பெரும் தவறு.
வீடுகளிலிருந்து பணியாற்றும் பொழுது நம்முடைய செலவுகள் குறைந்துள்ளது. வீட்டில் உள்ளவர்களிட அதிக நேரம் செலவழிக்க முடிகிறது.
புதிய முயற்சி ஒவ்வொன்றிலும் நன்மை தீமை என்று இருவேறு பக்கங்கள் இருக்கத்தான் செய்யும் அதனை சரியான முறையில் பயன்படுத்தி நல்வழிப்படுத்தி கொள்வதே நம்முடைய வளர்ச்சிக்கான பாதையை அமைத்துக் கொள்ள உதவும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF