திருச்சி பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறை - தாய்மார்கள் அவதி

திருச்சி பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறை - தாய்மார்கள் அவதி

தாய் - சேய் நலனில் அக்கறை என்பது மிக முக்கியம். ஒரு தாய் தனது குழந்தையை எந்தவித நோயும் இன்றி நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ப்பதற்கு பிறந்த ஒரு வருடத்திற்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமாகும். பழங்கால பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து ஆரோக்கியத்துடன் வளர்த்து வந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயண நிமித்தம் காரணமாக வெளியே செல்லும்போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தங்கள் இருப்பிடத்தில் இருந்து பணிபுரியும் இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும். தாங்கள் அணியும் ஆடை மற்றும் பல்வேறு இடையூறுகள் காரணமாக பொது இடத்தில் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இ்ந்த நிலையில் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு எந்தவித இடையூறும் இன்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டு இயங்கி வந்தது. 

இதனைத் தொடர்ந்து நாளடைவில் இந்த அறைகள் முறையாக பராமரிப்பின்றி பயன்பாட்டிற்கில்லாமல் காட்சிப்பொருளாக தற்பொழுது உள்ளது. தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த இந்த பாலூட்டுமறை தற்பொழுது பயன்பாட்டில் இல்லாதது மிகவும் சிரமத்திற்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சி சத்திர பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் வரை திறக்கப்படாமல் போட்டியை கிடைக்கிறது இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் வெளியூர் மற்றும் சுற்றுலா வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

நல்ல நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறையை தாய்மார்களின் நலனில் அக்கறை கொண்டு மூடப்பட்டு கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பாலூட்டும் அறையை சுத்தமாக பேணி பாதுகாக்க வேண்டும் என தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision