போக்குவரத்து நெரிசலில் சிக்கி அரை மணி நேரம் நோயாளியுடன் தவித்த ஆம்புலன்ஸ்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி அரை மணி நேரம் நோயாளியுடன் தவித்த ஆம்புலன்ஸ்

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. துறையூரில் இருந்து சென்னை மதுரை, சேலம், உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ஏராளமான பேருந்துகள் சென்று வருகின்றன. மிக சிறிய அளவிலான இடவசதி கொண்ட துறையூர் பேருந்து நிலையம் என்பதால் தினசரி பேருந்துகள் உள்ளே செல்லும் போதும், பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வரும் போதும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மணி கணக்கில் பேருந்துகள் சிக்கித் தவிக்கின்றன.

கடந்த வருடம் துறையூருக்கு புதிய பேருந்து நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு இதனால் வரை எவ்விதமாக பணிகளும் தொடங்கப்படாமல் கிணற்றில் போட்ட கல்லாக கிடகிறது. இந்த நிலையில் பகல் மற்றும் அலுவலக நேரங்கிலில் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு பேருந்து நிலையம் முன்பு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் அவசர உறுதியான 108 ஆம்புலன்ஸ் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சைரன் சத்தம் ஒளியுடன் சிக்கி தவித்தது வெகுநேர போராட்டத்திற்கு பிறகு நோயாளியுடன் காத்திருந்த ஆம்புலன்ஸ் தப்பி சென்றது.

எனவே விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைத்து போக்குவரத்து நெரிசலில் இருந்து துறையூர் நகரை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision