கொரோனா நெகிழ்ச்சி ! 33 ரூபாய்க்கு தொடங்கிய திட்டம் இன்று ஆயிரக்கணக்கானோர் பசியை ஆற்றுகிறது!!நீங்களும் உதவலாம்!!

கொரோனா நெகிழ்ச்சி ! 33 ரூபாய்க்கு தொடங்கிய திட்டம் இன்று ஆயிரக்கணக்கானோர் பசியை ஆற்றுகிறது!!நீங்களும் உதவலாம்!!

கொரோனா நோய் தாக்கத்தால் இன்றளவும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் சமுதாயத்தில் பலர் சொல்லொணாத் துயரில் அன்றாட உணவிற்கும் வழியின்றி, அன்றாட வாழ்க்கையை நடத்த தேவையான பொருட்களின்றி தவித்து வருகின்றனர். நம் திருச்சியை சேர்ந்த ஒரு அமைப்பு 500 பேருக்கு தினமும் உணவளித்து, 1000ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு சிறப்பு தொகுப்பை பற்றி காண்போம்!!

திருச்சியில் PSR TRUST என்னும் அமைப்பு தில்லை நகரில் இயங்கி வருகிறது. கொரோனா நோய் மட்டுமல்லாது சமுதாயத்தில் ஏற்படும் பல இன்னல்களுக்கும் பேரிடர்களுக்கும் இன்றளவும் துணைபுரிந்தது செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு. உதவி என்றால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி பல உதவிகளை இன்றளவும் அயராமல் செய்துவரும் அமைப்பு இது. இந்த கொரோனா காலகட்டத்தில் திருச்சியில் கடந்த ஏப்ரல் 9ம் தேதியிலிருந்து இன்று வரை தினமும் 500 பேருக்கு உணவளித்து பசித்துயர் போக்கி வருகிறது. இதுமட்டுமல்லாமல் 7 மாவட்டங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, எண்ணெய், சாம்பார் தூள், பூண்டு, டீ தூள், சோப்பு, உப்பு, நாக்கின் முதற்கொண்டு பல பொருள்களை இன்றளவும் பல குடும்பங்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

PSR TRUST அமைப்பின் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் கூறுகையில் "நான் கி.ஆ.பெ விசுவநாதம் பள்ளியில் படித்தேன். அங்குள்ள எனது ஆசிரியர்களான பாண்டியன்(P), சந்தன கோபாலகிருஷ்ணன்(S), ராம்குமார்(R)ஆகிய ஆசிரியர்களின் பெயரையே தன்னுடைய அமைப்பிற்கு பெயராக சூட்டியுள்ளேன்.இது மாதிரியான பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி புரிவதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கின்றோம்.

இந்த கொரோனா காலகட்டத்தில் மூன்று பிரிவுகளாக பிரித்து சாலையோரம் வசிப்பவர்கள்,ரேஷன் அட்டைகள் இல்லாதவர்கள், உணவின்றி தவிப்பவர்கள் என திருச்சியில் ஏப்ரல் 9ம் தேதியில் இருந்து இன்றுவரை தினமும் சுமார் 500 பேருக்கு உணவு அளித்து வருகிறோம். இதுமட்டுமல்லாமல் 7 மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் முகாம், ரேஷன் அட்டை இல்லாதவர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என உதவி கோரும் அனைவருக்கும் இங்கிருந்தே பல உதவிகளை அனுப்பி கொண்டும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி கொண்டு வருகிறோம்.

PSR TRUST ஷேக் அப்துல்லாஹ்

இங்கு அனைவரின் உதவியும் ஒருசேர பெற்று தேவையுடைய மக்களுக்கு சென்று சேர்ப்பது தான் என்னுடைய ஒரே குறிக்கோள். இதற்காக 33 ரூபாய் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். ஒரு நபருக்கு ஒரு வேளை உணவிற்கு ஆகும் தொகை 33 ரூபாய். இத்திட்டம் ஆரம்பித்த சில நாட்களிலேயே 7,84,828 ரூபாய் இன்று வரை வந்துள்ளது. அதை மக்களிடம் சேர்த்துள்ளோம் என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமை கொள்கிறேன். இன்னும் தேவைப்படும் மக்களுக்கு அதிகமாக கொடுக்கப் போகிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.என்றார்

இந்த 33 ரூபாய் திட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு வேளை உணவை நீங்களும் அளித்து சிறுதுளி பெரு வெள்ளமாய் நம்முடைய சக சமுதாய மக்களுக்கு உதவிட உங்களை அன்போடு அழைக்கின்றோம். நீங்களும் இத்திட்டத்தில் உங்களுடைய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள PSR TRUST A/C No - 35354692250 Thillainager Branch, Trichy.Ifsc Code - SBIN0012795 மற்றும் Google Pay / Phone Pe / Paytm 9944144104 என்ற எண்ணிற்கு உங்களால் முடிந்த ஒரு நபருக்கான உதவியை செய்திடலாம். நம்முடைய திருச்சியை சேர்ந்த PSR TRUST நம்முடைய மக்களுக்கு இது மாதிரியான காலகட்டத்தில் உதவுவதை பெருமையாக கொள்கின்றோம்.