திருச்சி முகாமில் இருந்த 7 இலங்கை தமிழர்கள் விடுதலை

திருச்சி முகாமில் இருந்த 7 இலங்கை தமிழர்கள் விடுதலை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் இருந்து இன்று 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு சிறப்பு முகாம்களில் வைத்து பராமரித்து வருகிறது.அதில் இலங்கை கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 117 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது இன்றுவரை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிறப்பு முகாம் வாசிகளில் ஏழு பேருக்கு விடுதலையாவதற்கான உத்தரவு ஆவணங்கள் வந்து சேர்ந்ததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கேகே நகர் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான காவலர்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஏழு பேரை அவர்களுடைய உறவினர்களுடன், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், பொள்ளாச்சியை சேர்ந்த பார்த்திபன், விருதுநகரை சேர்ந்த விஜயகுமார், கும்மிடிப்பூண்டி சேர்ந்த கனக சபை, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிஹரன், சசிஹரன் ஏசுதாஸ் ஆகிய ஏழு பேரும் தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

 # திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn