சிறுதானிய உணவு விழிப்புணர்வு கூட்டம்

சிறுதானிய உணவு விழிப்புணர்வு கூட்டம்

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக துவாக்குடி பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) உள்ள கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு சர்வதேச சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு மற்றும் உணவு பொருளில் உள்ள கலப்படத்தை எளிதில் கண்டறிவது பற்றிய விழிப்புணர்வு 140-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக விழிப்புணர்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு,  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை கல்லுாரி முனைவர் ராமகல்யாண் ஐயக்கிரி ICE துறை இயக்குநர், கணினி துறை முனைவர்  V.சாந்தி, கணினி துறை முனைவர்I.ஜெயராமன். கணினி துறை முனைவர் .பிரகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு.  கூறுகையில் சிறுதானிய உணவு உட்கொள்ளுதல் நன்மைகளை எடுத்துரைத்தும், வருங்காலங்களில் அனைத்து உணவு விடுதிகளிலும் வாரம் ஒரு முறை சிறுதானிய உணவு மெனுவில் கட்டாயம் இடம் பெறுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

       
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn