திருச்சியில் ஜல்லிக்கட்டு - உற்சாகத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல தேவாலயத் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியில் 700 காளைகளும், 350க்கும் மேற்பட்ட காளையர்களும் களமிறக்கப்படுகின்றனர்.
தேவாலயத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு வாடிவாசல் வந்தடைந்த கோவில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் ஒன்றின்பின் ஒன்றாக வாடிவாசலில் வழியாக அவிழ்க்கப்பட்டு வருகிறது. இப்போட்டியினை திருச்சி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ் போட்டியை துவக்கி வைத்தனர்.
வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn