கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் திருச்சிக்கு அவர்கள் செய்தது என்ன? அமைச்சர் கே.என் நேரு பேட்டி

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் திருச்சிக்கு அவர்கள் செய்தது என்ன? அமைச்சர் கே.என் நேரு பேட்டி

திருச்சி உறையூர் லிங்க நகர் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கூட்டுறவுத் துறையின் புதிய நியாய விலைக் கடையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்..

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் திருச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்...

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் திருச்சிக்கு அவர்கள் செய்தது என்ன?

தமிழ்நாடு காகித ஆலை (Tnbl) எம்.ஜி.ஆர் காலத்தில் திருச்சியில் தொடங்கப்பட்டது. அதன் இரண்டாவது யூனிட்டை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தேசிய சட்டப் பள்ளி கொண்டு வந்ததாக அவர்கள் கூறுவார்கள். 

கலைஞர் ஆட்சிகாலத்தில் புதிதாக பொறியியல் கல்லூரி, IIM கல்வி நிறுவனம், மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம், நீதிமன்ற புதிய கட்டிடம், கலைஞர் ஆட்சிகாலத்தில் திருச்சி மக்களுக்கு 100Mld குடிநீர், ஸ்டாலின் ஆட்சிகாலத்தில் கூடுதலாக 100MLD குடிநீர், சாலைகள் என பல திட்டங்கள் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது திருச்சி பேருந்து முனைய புதிய கட்டுமானத்துக்கு, 380 கோடி, புதிய சந்தை அமைக்க 100 கோடி, தொழில் பூங்கா அமைக்க 600 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்துவருகிறது. 

அதிமுக ஆட்சியில் செய்ததை அவர்கள் சொல்கிறார்கள். எங்கள் ஆட்சியில் செய்ததை நாங்கள் சொல்கிறோம் யார் திருச்சிக்கு அதிகமாக செய்துள்ளார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.

அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடைக்கு பணிகளை தொடங்கி விட்டு நிதி ஒதுக்காமல் சென்று விட்டார்கள். அதற்கு உரிய நிதியை ஒதுக்கி பணிகளை திமுக ஆட்சியில் செய்து வருகிறோம்.

நீதிமன்ற அலுவலகம் அருகில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. அந்த இடத்தில் ரவுண்டானாவை சுருக்கினால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அங்கிருந்து அல்லித்துறை வரை புதிய சாலை அமைக்க உள்ளோம். திருச்சி சிந்தாமணி முதல் குடமுருட்டி வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. பெரும்பகுதியான திட்டங்கள் கலைஞர் ஆட்சிக் காலத்திலும் தளபதி (மு.க.ஸ்டாலின் )ஆட்சி காலத்திலும் திருச்சிக்கு வந்திரு க்கிறது என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn