அமைச்சர் நேரு நிறுத்திக் கொள்ள வேண்டும் - திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அமைச்சர் நேரு நிறுத்திக் கொள்ள வேண்டும் - திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் மத்திய அரசின் பாரத மிகுமின் நிலையம் (பெல்) அமைந்துள்ளது. இதன் நுழைவு பகுதியில் பெல் நிறுவன அனுமதியுடன் அ.தி.மு.க.வின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்- அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 7 அடி உயரமுள்ள முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையினை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயன்றும் அ.தி.மு.க.வை அசைக்க முடியவில்லை. இதனால் தான் அவர் பி டீமை (ஓ.பன்னீர் செல்வம் அணி) உருவாக்கி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் இங்கு மாநாடு நடத்தினார். ஆனால் நாம் எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்படும் என்று அறிவித்ததற்கே இங்கு மாநாடு போல் தொண்டர்களான நீங்கள் திரண்டு உள்ளீர்கள்.

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதும், ஏதாவது வாய்திறந்து விடுவாரோ என்று பயந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அவரது குடும்பத்தினர் வரை அவரை சென்று பரர்த்து வருகிறார்கள். தி.மு.க.வின் இந்த 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட கால ஆட்சி 2 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு துன்பமும், வேதனையும் தான் கிடைத்துள்ளதே தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை. செந்தில்பாலாஜி வாய் திறந்தால் இந்த ஆட்சி கோவிந்தா தான். இந்த ஆட்சியை காப்பாற்றவே அவர்கள் செந்தில்பாலாஜியை காப்பாற்ற துடிக்கிறார்கள்.

இங்குள்ள அமைச்சர் கே. என்.நேரு, திருச்சி மாநகருக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எதுவுமே செய்யவில்லை. என்று கூறுகிறார். எங்கள் ஆட்சி காலத்தில் தான் திருச்சி மாநகருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல கோடிக்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். திருச்சியில் தேசிய சட்டப் பள்ளி, வண்ணத்துப்பூச்சி பூங்கா, கல்லூரிகள் உள்பட பல கட்டிடங்கள் கோடிக்க ணக்கான ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் 10 ஆண்டு கால ஆட்சியில் திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை என்று அமைச்சர் நேரு பச்சை பொய் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இவ்விழாவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, சிவபதி, முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைய செயலாளர் ஜெ.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. எம். செல்வராசு, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திருச்சி மாவட்ட, மாந கர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision