இந்திய ஜனநாயக கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம்
திருச்சி மாவட்டம் முசிறியில் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் காட்டுப்புத்தூர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் உயர் மட்டகுழு உறுப்பினர் மாநில துணை பொது செயலாளர் உதயசூரியன், ஆனந்த் முருகன், மாநில மகளை அணி செயலாளர் லீலா பாய் .கலந்து கொண்டனர். கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டத்தில்... திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும்,,இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் ஆற்றிய பணிகள் குறித்தும் நிர்வாகிகளுன் கலந்து ஆலோசனை செய்தனர்.
இக்கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் உதயசூரியன் ஆனந்த் முருகன் லீலா பாய் பேசுகையில்....... இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் அவர்களின் செய்த சாதனைகள் குறித்து தொகுதி மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். ஐந்தாண்டுகளில் முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, பெரம்பலூர், குளித்தலை உள்ளிட்ட 6 தொகுதியில் 1200 மாணவ மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கோடி செலவில் கல்வி வழங்கியது.
திருச்சி மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் பேருக்கு மேல் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் டாக்டர் பாரிவேந்தர் செய்த சாதனைகளை பொதுமக்களிடம் கட்சி நிர்வாகிகள் கொண்டு சேர்க்க வேண்டும். அதேபோல் மாவட்டம் முழுவதும் கட்சியில் தீவிர உறுப்பினர் சேர்க்க வேண்டும். கட்சியில் அனைத்து கிளைகளிலும் கொடிக்கம்பங்கள் அமைத்து கொடியேற்ற வேண்டும்.
வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும். கட்சியில் மாதந்தோறும் தவறாமல் கூட்டம் நடத்த வேண்டும். பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை அனைத்தும் மக்களுக்கே வழங்கிய ஒரே தலைவர் டாக்டர் பாரிவேந்தர் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் துறையூர் உப்பிலிபுரம் முசிறி தொட்டியம் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision