பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்வளர்ச்சி இயக்குனரின் ஆணைக்கிணங்கவும், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் அடிப்படையிலும் நடப்பாண்டில் திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவர்களுக் கான கவிதை, கட்டுரை, பேச் சுப்போட்டிகள் வருகிற 21-ந் தேதியும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 22-ந் தேதி ஆர்.சி.மேல்நிலைப் பள்ளியில் காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
பள்ளி-கல்லூரி மாணவர்கள் போட்டி களில் கலந்து கொள்வதற்கு ரிய படிவத்தை உரியவாறு நிறைவு செய்து தலைமையாசிரியர் அல்லது முதல்வர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் வருகிற 17-ந் தேதிக்குள் துணை இயக்குனர் தமிழ்வளர்ச்சித்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருச்சி 620001. என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் அல்லது மின்னஞ்சலில் (tamilvalar.try@gmail.com) உடன் அனுப்ப வேண்டும் அல்லது மாணவர்கள் போட்டிக்கு வரும்போது, நேரிலும் அளிக்கலாம்.
ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வகைப்பாட்டிலும் முதல்பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் மொத்த பரிசுத்தொகையாக ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் காசோலையாக வழங்கப்படும்.
மாவட்ட அளவில் முதல்பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்குபெற பரிந்துரை செய்யப்படுவர். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision