மாஸ்க்கை மாஸ்யா பின்பற்றும் திருச்சி தியேட்டர்

மாஸ்க்கை மாஸ்யா பின்பற்றும் திருச்சி தியேட்டர்

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதில் முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்தித்த நிலையில், கொரோனா தாக்கம் சற்று குறைய தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. தற்பொழுது கொரோனா தொற்று 3ம் அலை மீண்டும் தொடங்கி உள்ளது.

குறிப்பாக நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் LA சினிமாஸ் திரையரங்கு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது. புதிய திரைப்படங்கள் அதிகளவு வெளியாகி வருவதால் பார்வையாளர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

ஆனால் கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளை வழிமுறைகளை முறையாக பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என திரையரங்க நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் திரைப்படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து திரைப்படங்களை பார்த்து வருகின்றனர்.

மேலும் சமூக இடைவெளி, கிருமி நாசினிகளை கொண்டு கையை சுத்தப்படுத்திய பின்னரே திரையரங்குகள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO