முதல்வருக்கு மட்டும் முருகன் ஸ்பெஷல் பாஸ்போர்ட் கொடுத்துள்ளாரா? - நேரு பேட்டி
Advertisement
திமுக சார்பில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் 300 க்கும் மேற்பட்டோர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து பேரணியாக திருச்சி உழவர் சந்தை அருகே உள்ள இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடத்திற்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு,
Advertisement
கிராம சபை கூட்டம் நடத்தினால் மக்கள் தங்களுடைய குறைகளை சொல்லி கேள்வி எழுப்புவார்கள் என்ற அச்சத்தில் தான் அதிமுக கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துள்ளது.
முதல்வர் ஒரு முதல்வரை போல பேசுவதில்லை, திமுகவினரை தெருவில் வந்து பாரு என ஒருமையில் பேசி வருகிறார், முருகன் அருள் தர மாட்டார் என்ற முதலமைச்சரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, அவருக்கு மட்டும் முருகன் ஸ்பெஷல் பாஸ்போர்ட் கொடுத்துள்ளாரா? அதே முருகன் எங்களுக்கும் பாஸ்போர்ட் கொடுத்துள்ளார். யாருக்கு அருள் தர வேண்டும் தரக்கூடாது என்பது முருகனுக்கு தெரியும். எங்களுக்கும் அருள் தருவார் நாங்கள் ஜெயிப்பது உறுதி.
Advertisement
வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பம் குறித்த கேள்விக்கு பேரறிஞர் அண்ணா படமே வாக்காளர் பட்டியலில் வந்திருக்கிறது. இது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.