18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 
18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்... திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், சிறப்புப்பள்ளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 68 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 4495 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பயனடையும் விதமாக மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனிவரிசை அமைக்கப்பட்டு முன்னுரிமையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. 

எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட அனைத்து நகர நலவாழ்வு மையங்கள், புற நகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பிற பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் இம்முகாம்களில் 18 வயதிற்கு மேலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் முகக் கவசம் அணிந்து சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 

மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் - 0431-2412590-ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81