அரசுடமையாக்கப்பட்ட 203 வாகனங்கள் ஏலம் - திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

அரசுடமையாக்கப்பட்ட 203 வாகனங்கள் ஏலம் - திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு யாராலும் உரிமை கோராமல் இருக்கும் 203 வாகனங்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் மீது உரிமை கோரி இதுநாள் வரை யாரும் எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பித்தால் அந்த 203 வாகனங்களையும் அரசுடைமையாக்கி திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி வாகனங்கள் அனைத்தும் உரிய அலுவலர்கள் முன்னிலையில் வருகிற 30.09.20201ஆம் தேதி காலை 10 மணிக்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. ஏலம் கோர விருப்பமுள்ளவர்கள் முன்வைப்புத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு 2,000 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாயும் செலுத்தி ஏலம் கோர வேண்டும்.

ஏலத்தொகை உடன் தனியாக சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 30.09.20201 ஆம் தேதிக்கு முன்னதாக வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn