திருச்சியில் சாலை நடுவே அமர்ந்து பேச்சுவார்த்தை - போக்குவரத்து பாதிப்பு

திருச்சியில் சாலை நடுவே அமர்ந்து பேச்சுவார்த்தை - போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஊட்டத்தூர் கிராமத்தில் முத்தரையன் கோயில் உள்ளது. இதன் அருகில் 5 ஏக்கர் பரப்பளவில் அரசு கல் குவாரி அமைந்துள்ளது. இந்த கல் குவாரியை 5 ஆண்டுகளுக்கு ஒருவர் ஏலம் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், (16ம் தேதி) கல் குவாரி மீண்டும் பொது ஏலம் விட அரசு முறைப்படி அறிவித்திருந்தது. இந்நிலையில், ஊட்டத்தூரில் கல் குவாரி செயல்படுவதால் அதிர்வு ஏற்படுவது மட்டுமல்லாமல், அதிக ஆழத்திற்கு கல் வெட்டி எடுக்கப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, கல் குவாரியை ஏலம் விடுவதை அதிகாரிகள் உடனே கை விட வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக அறிவுறுத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் சாலை நடுவே அமைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்

லால்குடி ஆர்டிஓ சிவ சுப்ரமணியன், தாசில்தார் விக்னேஷ், டிஎஸ்பி அஜய் தங்கம் மற்றும் போலீசார் ஆகியோர் பொதுமக்களிடம் ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் அனைவரும் மறியலை கைவிட்டனர். இதனால் ஊட்டத்தூரில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision