திருச்சி மாவட்டத்தில் மூன்று அரசு நடுநிலைப்பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளுக்கான கேடயத்தினை மூன்று நடுநிலைப் பள்ளிகள் பெற்று அசத்தியுள்ளன. ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து அப்பள்ளிகளுக்கான கேடயங்களை வழங்கி பெருமைப்படுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் 116 பள்ளிகள் இக் கேடயங்களை பெற்றுள்ளன
சென்னையில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் தமிழ்நாடு நலம் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அறநிலையத்துறை அமைச்சர் சேகபாபு கலந்து கொண்டு இக்கேடயங்களை வழங்கி உள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்தில் ராஜன் நடுநிலைப் பள்ளியும் காடுவெட்டி ஒன்றியத்தில் திருவரம்பூர் ஒன்றியத்தில் சின்ன சூரியூர் நடுநிலைப் பள்ளியும் இந் கேடயங்களை பெற்றுள்ளன
சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்களைப் பெற்றுக் கொண்ட மூன்று பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஆசிரிய பெருமக்களும் அந்தந்த பள்ளிகளின் வட்டார கல்வி அலுவலர்களோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருமதி பேபி அவர்களும் இணைந்து திருச்சிராப்பள்ளி முதன்மை கல்வி அலுவலர்கள் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள் இப்பள்ளிகளில் ஐந்து வயது நிறைவுற்ற அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளதோடு தொடர்ந்து என் எம் எம் எஸ் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளதற்காகவும், இணைய வழி கற்றல் கற்பித்தலில் மிகச்சிறந்த நிலையை எட்டியதற்காகவும் ஆன்லைன் ரேடியோவில் தொடர்ந்து மாணவர்களை பங்கேற்கச் செய்ததற்காகவும் சரியான உட்கட்டமைப்பை பெற்றுள்ளதற்காகவும் இப்பள்ளிகள் சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்களை பெற்றுள்ளன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision