குட்கா விற்பனை தேநீரகத்திற்கு சீல்
திருச்சிராப்பள்ளி, வையம்பட்டியில் உள்ள ஸ்ரீ பாலாஜி ஸ்வீட்ஸ் & பேக்கரி என்ற கடைக்கும் திருச்சி ஏர்போர்ட் ரோட்டில் உள்ள கஸ்தூரி மளிகை கடையையும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததுனால் வையம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் முருகேசனும், உதவி ஆய்வாளர் வினோத்குமார் மற்றும் ஏர்போர்ட் காவல் நிலைய ஆய்வாளர் மலைசாமி அவர்களும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை நேற்று பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர்கள் இருவரும் மேல்நடவடிக்கைக்காக திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ஆர்.ரமேஷ்பாபு பரிந்துரை செய்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் முருகேசன், உதவி ஆய்வாளர் வினோத்குமார் மற்றும் மலைசாமி அவர்கள் முன்னிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராஹிம், வடிவேல், ஸ்டாலின், வசந்தன் மற்றும் அன்புச்செல்வன் ஆகியோர் அடங்கிய குழு இரு கடைகளையும் தற்காலிகமாக சீல் செய்தனர்.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO