திருச்சியில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் கண்டுணர்வு சுற்றுலா.

திருச்சியில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் கண்டுணர்வு சுற்றுலா.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை தலைப்பின் கீழ் இயற்கை விவசாயம் கண்டுணர்வு சுற்றுலா நடைபெற்றது. லால்குடி வட்டார விவசாயிகளை தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி மட்ஃபீல்ட் இயற்கை விவசாயம் கண்டுணர்வு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டது.

இதில் அங்கக வேளாண்மை சாகுபடி தொழில் நுட்பங்கள் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பஞ்சகாவியா தசக்காவியா பத்திலை கரைசல் கரைசல் தயார் செய்தல் பற்றி செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. முன்னதாக லால்குடி வட்டார அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன் பேசுகையில் அங்கக வேளாண்மை முக்கியத்துவம் சுற்றுலாவிற்கான நோக்கம் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.

துணை நிர்வாக இயக்குனர் கணேசமூர்த்தி மட்ஃபீல்டு நேச்சுரல் பார்மிங் பேசுகையில் பாரம்பரிய நெல் விதை தேர்வு, உயிர் உர விதை நேர்த்தி, நாட்றாங்களில் விதை தெளித்தல், நடவு வயல் தயார் செய்தல் பசுந்தாள் பயிர் விதைப்பு செய்து மடக்கி உழவு செய்தல், அடி உரமாக வேப்பம் புண்ணாக்கு கடலை புண்ணாக்கு பயன்படுத்துதல் மற்றும் களை எடுத்தல் பற்றி விரிவாக விளக்கி கூறினார் மேலும் விதைப்பு முதல் அறுவடை வரை எந்தவித பூச்சிக்கொல்லி இரசாயன மருந்துகள் இன்றி அங்கக முறையில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி பற்றிய தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்க கூறினார்.

மேலும் நிர்வாக இயக்குனர் சபரி ஸ்ரீநிவாஸ் பேசுகையில் இயந்திர முறையில் நடவு செய்தல் கோன வீடர் கொண்டு களை எடுத்தல், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ், பிவேரியா பேசியானா போன்றவற்றை பயன்படுத்தும் முறையில் பற்றி விரிவாக விளக்கி கூறினார். இயற்கை விவசாயி சொல்லின் செல்வன் பஞ்சகாவியா, பத்திலை கரைசல் நேரடி செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பித்தார். இந்த சுற்றுலாவில் ஆதிகுடி, கொப்பாவளி, புதூர் உத்தமனூர், பூவாளூர், ஆலங்குடி மகாஜனம், செங்கரையூர், மருதூர் கிராமத்திலிருந்து பல முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இதற்கான ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் சந்திரசேகர் விஸ்வநாதன், எடிசன், பிரவீன், கவிதா, ராஜசேகரன், அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக், தமிழ் மணி ஆகியோர் செய்து இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision