காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு "விழிப்புணர்வு கருத்தரங்கம்"
காவல்துறை மற்றும் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவும், ஒரு சமநிலை சமூகத்தை உருவாக்கவும் தகுதிவாய்ந்த நபர்களை கொண்டு, கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை சமுதாய கூடத்தில் 18.03.2022-ந்தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் கருந்தரங்கத்தை காவல் ஆணையர் கார்த்திகேயன், தொடங்கி வைத்தார்.
மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் சிறப்புரையில், "சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக பணியாற்றும் பெண்களுக்கு வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்து கொண்டும், தமிழக காவல்துறையில் ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், பெண்களும் ஆண்களுக்கு இணையாக காவல்துறையில் பணிபுரிந்து வருவதாகவும், மேலும் நாட்டிலேயே தமிழக காவல்துறையில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருவதாகவும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி இந்தியாவிலேயே தமிழக காவல்துறை முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும்,
மேலும் பெண்களுக்கான வேலை வாய்ப்பில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளதாகவும், பல சமூக கட்டமைப்புகையில் பெண்கள் பணிபுரிந்து வருவதாகவும், காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் பெண்கள் பாதுகாப்பு குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு, வேறு பணிகளில் உள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களுக்கு பாதுகாப்பு குறித்து தெரிவிக்கவேண்டும் எனவும், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு நிறுவனங்கள் மூலமாக இலவச உதவி எண்கள்: 1091 மற்றும் 181 மூலமாகவும் அன்றாட பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளவேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த கருத்தரங்கினை எல்லோரும் பாதுகாப்பு குறித்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என கூறி உரையாற்றினார்கள்". மேலும் இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு சரகம், கூடுதல் காவல் துணை ஆணையர் மற்றும் 60 பெண்கள் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய...