தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தலைநகர் டெல்லியில் 75 வது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் மத்திய கல்வித்துறை அமைச்சகம் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வீர்கதா 3.0 சூப்பர் 100 என்கிற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தேசிய அளவில் 100 திறமையான மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுப்பதற்க்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மத்திய அரசு சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒரு கோடியே 3 லட்சம் மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டிகளில் கலந்து கொண்டனர். அவர்களில் இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 100 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.

இந்த 100 வெற்றியாளர்களில் ஒருவராக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த செயின்ட் ஜேம்ஸ் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் கயல்விழி என்கிற மாணவி, ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு ஜான்சிராணியின் படத்தினை வரைந்து வெற்றி பெற்று தமிழ் நாட்டிற்க்கும், திருச்சி மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ளார். தேசிய அளவில் வெற்றி பெற்ற சூப்பர் 100 மாணவர்களுக்கு தலைநகர் டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதக்கம், சான்று மற்றும் பரிசு தொகை 10,000 யினை வழங்கி சிறப்பித்தார். 

அதே பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் தமிழ் வேந்தன் என்கிற மாணவர் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்று வெற்றி பெற்றார். இப்போட்டியில் டெல்லி, அசாம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார், மஹாராஷ்டிரா, உத்தர்பிரதேஷ், ஒரிசா, உத்தர்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 300 வீரர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்று திருச்சி திரும்பிய இரு மாணவர்களும், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். அதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் ந.காமினி, மாநகர காவல்துறை துணை ஆணையர் செல்வகுமார், திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் வி.அன்பு மற்றும் உதவி ஆணையர் நிக்ஸன் ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். 

மேலும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சமூக நல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கம், தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் அமைப்பு, பெட்காட் திருச்சி மாநகர மாவட்டம், தாய் நேசம் அறக்கட்டளை, சமூக செயற்ப்பாட்டாளர்கள், ஆர்ம்ஸ்ட்ராங் ராபி ஒயிட் ரோஸ் சமூநல அமைப்பு, பெட்காட் மகளிர் பிரிவு, தின சேவை அறக்கட்டளை, மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பு மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision