திருச்சி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்- பரபரப்பு

திருச்சி  சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு  போராட்டம்- பரபரப்பு

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் ரூ.5 முதல் ரூ.1165 வரை கட்டணம் உயர்ந்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் துவாக்குடி சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது.

திருச்சியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் அதிகாலை முதல் உயர்ந்து. இந்த சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் தடுத்து நிறுத்தியதையும் மீறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 25 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாழவந்தான் கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் தரையில் அமர்ந்து காவல் துறை இடம் கைதாக மாட்டேன் உடனடியாக சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் சுங்க கட்டணத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு அமர்ந்தார். பின்னர் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்த போராட்டத்தினால் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision