திருச்சியில் தின்னர் தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
திருச்சி முதலியார் சத்திரம், பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் மகன் கமலூதீன். இவர் முதலியார் சத்திரம் அருகில் உள்ள ஆலம் தெரு பகுதியில் கமால் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் தின்னர் தயாரித்து விநியோகம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று இரவு 7:30 மணி அளவில் புகை வருவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பெயரில் தீயணைப்பு துறை அதிகாரி ஜெகதீசன் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனம் மற்றும் மாநகராட்சி தண்ணீர் வழங்கும் வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்ணீர் மற்றும், ரசாயனத்தை கொண்டு போராடி தீயை அணைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் தின்னர் தயாரிப்பதற்காக மூன்று பேரல்களில் வைக்கப்பட்டிருந்த ரசாயனம் தீ பற்றி வெடித்ததை அடுத்து தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அசம்பாவிதம் ஏற்படாதவாறு கட்டிடத்தில் பல்வேறு பகுதிகளும் தண்ணீர் அடித்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்து.
தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து தொடர்பாக திருச்சி பாலக்கரை காவல் நிலைய காவல்துறையினர் உரிமையாளர் கமாலுதீனை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்த கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தீயணைப்பு துறை அதிகாரிகள் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் ரிஸ்வான்பானு ஆகியோர் நேரில் சென்று இடத்தை பார்வையிட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision