திருச்சி மாவட்டத்தில் 12,655 மாணவர்களுக்கு 1000 ரூபாய்

திருச்சி மாவட்டத்தில் 12,655 மாணவர்களுக்கு 1000 ரூபாய்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தினை காணொளி வாயிலாக கோயம்புத்தூரில் இருந்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற தமிழ் புதல்வன் நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தமிழ் புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி அட்டையை வழங்கினார்கள். 

திருச்சி மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தில் முதற்கட்டமாக 123 கல்லூரிகளைச் சேர்ந்த 12,655 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். மாணவர்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிக்கோ இருதயராஜ், ஸ்டாலின் குமார், பழனியாண்டி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision