கோரிக்கை பேஜ் அணிந்து பணிக்கு சென்ற எச் இ பி எஃப் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள்

கோரிக்கை பேஜ் அணிந்து பணிக்கு சென்ற எச் இ பி எஃப் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள்

மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டுஅக்டோபர் 1ம் தேதி நாட்டில் உள்ள 41 படைத்துறை தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன் யூனிட்களாக மாற்றி தன்னிச்சையாக அறிவித்தது. அன்று முதல் ஏ ஐ டி இ எஃப், பி பி எம் எஸ்,மற்றும் சி டி ஆர் ஏ உள்ளிட்ட அமைப்புக்கள் கடுமையான கண்டனம் மற்றும் எதிர்ப்பை பதிவு செய்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ம் தேதியை கறுப்பு தினமாக பாதுகாப்பு துறை ஊழியர்கள் கடைபிடித்து வருகின்றனர். இன்று திருச்சியில் உள்ள படைகளன் தொழிற்சாலைகளில் காலையில் பணிக்கு சென்ற தொழிலாளிகள் கருப்பு கோரிக்கை அட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஹச் டி பி எஃப் தொழிற்சாலையில் எம்ப்ளாயீஸ் யூனியன் தொழிற்சங்க உதவி தலைவர் விஜயன் தலைமையில் பொதுச்செயலாளர் இரணியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கருப்பு கோரிக்கை பேஜ் அணிந்து பணிக்கு சென்றனர்.

அதேபோல் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்களும் கார்ப்பரேட் எதிர்ப்பு தினமாகவும் கருப்பு தினமாகவும் கருதி கருப்பு கோரிக்கையை பேஜ் அணிந்து பணிக்கு சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision