திருச்சி அரசு மருத்துவமனையில் ரூபாய் 1 கோடியே 75 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூபாய் 1 கோடியே 75 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்

பாரதப் பிரதமர், திருச்சிராப்பள்ளி 
மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில், பி.எம் கேர். 
திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை கானொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் 
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் 
டாக்டர்.க.மணிவாசன், மாவட்ட 
ஆட்சித்தலைவர் சு.சிவராசு ஆகியோர் 
மருத்துவ சேவை பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தனர்.

ஆக்ஸிஜன் உற்பத்தி மையமானது பி.எம்.கேர். திட்டத்தின் 
கீழ் 1.25 கோடி பொருள் மதிப்பிலும், பொதுப்பணித்துறையின் சார்பில், கட்டமைப்பு மற்றும் மின்சாரவசதிகள் ரூபாய் 50 இலட்சம் மதிப்பிலும் ஆக மொத்தம் ரூபாய் 1.75 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதனால், ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி மக்களுக்கான மருத்துவ சேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிகழ்வில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.அருண்ராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn