சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வேன் மீது கார் மோதல் - இரு பெண்கள் உயிரிழப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வேன் மீது கார் மோதல் - இரு பெண்கள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வேனில் ஊருக்கு சென்ற பெண் பக்தர்கள் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். 15 பெண்கள் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் முகமது உசேன் என்பவரை கொள்ளிடம் போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அருகே கலக்குடிபட்டி பகுதியை சேர்ந்த 17 பெண்கள் தை அமாவாசை விழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இரவு தரிசனம் செய்துவிட்டு டாட்டா ஏசி வாகனம் மூலம் 17 பெண்களும் வேனில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்றனர். சமயபுரம் அருகே கூத்தூர் மேம்பாலம் வழியாக வேன் சென்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் வேகமாக வந்து பக்தர்கள் சென்ற டாட்டா ஏசி பின்னால் கடுமையாக மோதியது.

இதில் வேனில் இருந்த 47 வயதான வசந்தி மற்றும் 37 வயதான சாந்தி என்ற இரு பெண்ணும் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த செல்லம்மாள், இந்திரா, லதா, மகமாயி, தமிழரசி உள்ளிட்ட 15 பெண்களும் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை திருச்சி அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சமயபுரம் அருகே ஈச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்துல் கபூர் என்பவரின் மகன் முகமது உசேன் வயது 39 என்பவரை கொள்ளிடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn