திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல் போராட்டம் - தொழிலாளி மயக்கம் - பதட்டம்
திருச்சி மத்திய பேருந்து நிலைய வாயிலில் போக்குவரத்து தொழிலாளர்கள் (ஏஐடியூசி, அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சிஐடியூ வினர்) பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பேருந்துகள் வெளியே வர முடியாத அளவிக்கு சாலையில் அமர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் மயக்கமடைந்தார். பின்னர் அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்து சக தொழிலாளர்கள் அழைத்து சென்றனர்.
தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளது. சினிமாவிற்கு 420 கோடி ரூபாய் வரை செலவு செய்யும் போது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 72 கோடி ரூபாய் அகவிலை படி கொடுப்பதற்கு தயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் நீதிமன்றம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்காது.
போக்குவரத்து தொழிலாளர்களின் நிதி 13,000 கோடி ரூபாய் அரசிடம் உள்ளது. பாரபட்சம் பார்க்காமல் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். எனவே நீதிமன்ற தீர்ப்பு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும்' அதை ஏற்று தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவோம். அரசுடன் பேச்சு வார்த்தைக்கு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தயாராக உள்ளனர். பேசி தீர்வு காணாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவதை தவிர வழியில்லை.
போதிய பயிற்சி இல்லாதவர்களையும் லாரி டிரைவர்களையும் வைத்து அரசு பஸ்ஸை இயக்கும் தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த கட்டமாக அனைத்து அரசு துறைகளும் இணைந்து போராட்டத்தை நடத்த உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision