அசத்தப்போகும் அமேசான் Republic Day விற்பனை.. ஆஃபரில் டிவி, போன்கள், லேப்டாப்.!

அசத்தப்போகும் அமேசான் Republic Day விற்பனை.. ஆஃபரில் டிவி, போன்கள், லேப்டாப்.!

அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2024 சிறப்பு விற்பனை விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இதுகுறித்து டீசர் ஒன்றை அமேசான் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 15ம் தேதி தொடங்கியது. அதேபோல் இந்த ஆண்டும் ஜனவரி 15ம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அமேசான் வெளியிட்டுள்ள டீசரில், ஐபோன் 13, ரெட்மி நோட் 12 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ்23, ஒன்பிளஸ் 11 5ஜி, ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி, ஹானர் 90 5ஜி, மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ராஇ ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி உள்ளிட்ட போன்களுக்கு தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அமேசான் சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும். 

பின்பு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களிலும் மொபைல்போன்களை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புபவர்கள் இந்த அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2024 என்னும் சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது நல்லது.  மேசான் சிறப்பு விற்பனையில் லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள் மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை 60 சதவிகிதம் தள்ளுபடியில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெச்பி, டெல், அசுஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2024 மூலம் ஹெட்ஃபோன்களை 80 சதவிகிதம் தள்ளுபடியில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார் டிவிகளை இந்த சிறப்பு விற்பனையில் 50 சதவிகிதம் தள்ளுபடியில் வாங்க முடியும். பின்பு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு 80 சதவிகிதம் தள்ளுபடியில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் சிறப்பு விற்பனை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision